×

தண்டவாளத்தில் மண்சரிவு: ஊட்டி- குன்னூர் மலைரயில் ரத்து

ஊட்டி: தண்டவாளத்தில் மண்சரிந்து விழுந்ததால் ஊட்டி-குன்னூர் இடையே மலைரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குன்னூர்-ஊட்டி இடையே மலைரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கன மழை காரணமாக வெலிங்டன் ரயில் நிலையம் அருகே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தை மண் மூடியது. இதனால் ஊட்டி-குன்னூர் இடையே மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் விழுந்த மண் குவியல்களை அகற்றி சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

The post தண்டவாளத்தில் மண்சரிவு: ஊட்டி- குன்னூர் மலைரயில் ரத்து appeared first on Dinakaran.

Tags : Ooty ,Coonoor ,Nilgiris ,Northeast ,Mettupalayam- ,Dinakaran ,
× RELATED தொட்டபெட்டா தேயிலை பூங்கா விரிவாக்க பணிகள் மும்முரம்