×
Saravana Stores

சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்: ஜம்மு சட்டப்பேரவையில் பாஜ எம்எல்ஏக்கள் அமளி


ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம் யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று கூடியது. இதில் சபாநாயகர் பதவிக்கு தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் மற்றும் 7 முறை எம்எல்ஏவான அப்துல் ரஹீம் ராதர் பெயர் முன்மொழியப்பட்டது. அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் அவர் சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர்,அவை தொடங்கியதும், புல்வாமாவின் மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏ வாஹித் பாரா சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்தார். இதற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜ எம்எல்ஏக்கள் 28 பேரும் அவை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பாஜ எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர், இந்த தீர்மானம் தன்னிடம் வரவில்லை என்றும் வரும்போது அது குறித்து ஆய்வு செய்வதாக கூறி பாஜ எம்எல்ஏக்களை அமரும்படி வலியுறுத்தினார். இதனிடையே பிடிபி எம்எல்ஏவின் இந்த நடவடிக்கை அரசு தீர்மானத்தை தவிர்க்கும் வகையில் இருப்பதாக தேசிய மாநாட்டு கட்சி விமர்சித்துள்ளது.

The post சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்: ஜம்மு சட்டப்பேரவையில் பாஜ எம்எல்ஏக்கள் அமளி appeared first on Dinakaran.

Tags : BJP ,Jammu Assembly ,Srinagar ,Jammu and ,Kashmir ,Union Territory Legislative Assembly elections ,National Conference Party ,Congress ,BJP MLAs ,Jammu ,Assembly ,Amali ,
× RELATED காஷ்மீர் பேரவையில் அமளியில் ஈடுபட்ட...