×

கொரோனா வைரசால் நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாதுகொரோனா வைரசால் நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாது: விவசாயிகளுக்கு ரூ.20,900 கோடி நிதியுதவி அளித்து மோடி பேச்சு

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் தொற்று புதிய சவாலை நம் முன் வைத்தாலும், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளில் தலா ரூ.2000 வீதம் ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 9 தவணைகளில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10வது தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, 10.09 கோடி விவசாயிகளுக்காக ரூ.20,900 கோடி நிதியை விடுவித்தார். மேலும், 351 விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளுக்கு ரூ.14 கோடி நிதி உதவியை விடுவித்தார். இதன் மூலம். 1.24 லட்சம் விவசாயிகள் பலன்  அடைவர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:2021ம் ஆண்டு, கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் வலுவான போராட்டத்திற்காகவும், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்களுக்காகவும் நினைவு கூரப்படும். கடந்த ஆண்டில் அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்த்திருத்தங்களால் நாடு வேகமாக முன்னேறியது, இந்த புத்தாண்டில் நம் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்த வேண்டும். கொரோனா நம் முன் புதிய சவால்களை முன் வைக்கலாம். ஆனால், அதனால் நாட்டின் வளர்ச்சி வேகத்தை தடுக்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் முழு விழிப்புடன்தொற்றுநோயை எதிர்த்து போரிட்டு, தேச நலனை காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பிரதமரை கவர்ந்த உபி வாழைப்பழம்நிதி உதவியை விடுவித்த பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு மாநில விவசாயிகளுடன் உரையாடினார். அப்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பிரதமரிடம் காண்பிக்க ஸ்டால் அமைத்திருந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த விவசாயி தரம்சந்த் காட்சிக்கு வைத்திருந்த பெரிய வாழைப்பழம் மோடியின் கவனத்தை ஈர்த்தது. அதில் ஏராளமான விளைபொருட்களுடன், பிரமாண்ட அளவில் இருந்த வாழைப்பழத்தை பார்த்து மோடி ஆச்சர்யப்பட்டார். அவரிடம் பேசிய விவசாயி தரம் சந்த், ‘சார், இது பிராண்டட் வாழைப்பழம். இதன் பெயர் ‘நவீன் வாழைப்பழம்’. எனக்கு வாய்ப்பளித்தால், உங்களை நேரில் சந்தித்து இந்த வாழைப்பழத்தை வழங்க ஆசைப்படுகிறேன்’ என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி, ‘நீங்கள் மற்ற விவசாயிகளுக்கு உத்வேகமாக இருப்பீர்கள்,’ என்று பாராட்டினார்.  * பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் மூலம், இதுவரையில் ரூ.1.6 லட்சம் கோடியை விவசாயிகளுக்கு 10 தவணைகளாக மோடி வழங்கியுள்ளார்….

The post கொரோனா வைரசால் நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாதுகொரோனா வைரசால் நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாது: விவசாயிகளுக்கு ரூ.20,900 கோடி நிதியுதவி அளித்து மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Coronavirus pandemic ,India ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி பதவி ஏற்பின்போது...