×

டிராவல் பண்ணது ஒரு குத்தமாயா… பெண்கள் பெட்டியில் பயணம் செய்த 1,400 ஆண்கள் கைது

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ரயிலில் பெண் பெட்டிகளில் பயணித்த 1,400 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் பெண்களுக்கென தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிப்பது முதல் சிறை தண்டனை வரை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மேற்குவங்கத்தில் கிழக்கு ரயில்வே மண்டலத்துக்குள்பட்ட ரயில்களின் பெண்களுக்கான பெட்டிகளில் பயணித்த 1,400 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.

இதுகுறித்து கிழக்கு ரயில்வே மண்டல அதிகாரி கூறியதாவது, “கடந்த அக்டோபரில் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்களின் பெண்களுக்கான பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தது தொடர்பாக 1,200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெண்கள் பெட்டியில் பயணம் சென்ற 1,400க்கும் மேற்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 262 பேர் ஹவுரா பகுதியை சேர்ந்தவர்கள். 574 பேர் சீல்டா, 176 பேர் மால்டா மற்றும் 392 பேர் அசன்சோல் பகுதியை சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்தார்.

The post டிராவல் பண்ணது ஒரு குத்தமாயா… பெண்கள் பெட்டியில் பயணம் செய்த 1,400 ஆண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kolkata ,West Bengal ,India ,Dinakaran ,
× RELATED கணவர் வீட்டில் தாய், தோழியுடன் 3 ஆண்டு...