×

வெள்ளத்தில் சிக்கிய 135 பேர் மீட்பு

மதுரை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் நீரோடை உள்ளது. நேற்று முன்தினம் ஏராளமான பொதுமக்கள் ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நீரோடையில் குளித்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர். அவர்களை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

தேனி மாவட்டம், போடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 35 பேர் வேனில், போடி அருகே வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை 6 மணிக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேட்டவராயன் கோயில் அருகே வந்தபோது, கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் வேன் சிக்கியது. சுமார் 2 மணி நேரம் போராடி, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

The post வெள்ளத்தில் சிக்கிய 135 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Rakachi Amman temple ,Chenbagathoppu forest ,Srivilliputhur ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED மாடுகள் சாலைகளில் திரிந்தால் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு