×

முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் பேசிய முதல்வர்; “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றக் கூடிய பல திட்டங்களை செய்துள்ளோம். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.

The post முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Muthuramalinga Devar ,Jayanti ,Ramanathapuram ,M. K. Stalin ,Devar Memorial ,Pasumpon ,Ministers ,Thangam Tennarasu ,I. Periyasamy ,Pasumbon ,Muthuramalinga Devarai… ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...