×

புத்தகம் வழங்கிய ஒருமாதத்தில் கோத்ரா படுகொலை பாடத்தை திரும்ப பெற்றது: ராஜஸ்தான் பா.ஜ அரசு நடவடிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்குள்ள அரசு பாடப்புத்தகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடங்களில் குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002ம் ஆண்டு நடந்த ரயில் எரிப்பு, அதை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகம் கடந்த மாதம் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது கோத்ரா படுகொலை தொடர்பான பாட புத்தகங்களை ஒரு மாதத்திற்குப் பிறகு ராஜஸ்தான் அரசு திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளது.

இந்தப் புத்தகங்களை சேகரித்து உரிய அலுவலகங்களில் சமர்ப்பிக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காகிதம் தரம், அச்சிடலின் தரத்தை மதிப்பிடுவதற் காக புத்தகம் திரும்ப பெறப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

The post புத்தகம் வழங்கிய ஒருமாதத்தில் கோத்ரா படுகொலை பாடத்தை திரும்ப பெற்றது: ராஜஸ்தான் பா.ஜ அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajasthan BJP Govt. ,Jaipur ,BJP ,Rajasthan ,Godhra, ,Gujarat ,
× RELATED ஜெய்பூர் பெட்ரோல் பங்க் முன் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு