×

அரியலூர் நகராட்சியில் அனைத்து திறந்தவெளி சாக்கடை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்: நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

 

அரியலூர், அக்.29: அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற சாதாரண கூட்டத்தில், திறந்தவெளி சாக்கடை வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அரியலூர் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண் உறுப்பினர்கள், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள திறந்த வெளி சாக்கடை வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அனைத்து ஏரிகளுக்கும் செல்லும் வாய்க்கால்களை தூர்வாரி மழை நாட்களில் நகர் பகுதியில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் நகராட்சியில் அனைத்து திறந்தவெளி சாக்கடை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்: நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ariyalur Municipality ,Council ,Ariyalur ,Municipal ,Office ,Municipal Council ,Municipal Office ,Dinakaran ,
× RELATED தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி கண்டனம்