×

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி கண்டனம்

சென்னை: தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது. அதில் பெப்சி அமைப்பினர் பற்றி அவதூறான பேச்சுகளை பேசியுள்ளனர். பேச்சுவார்த்தைகளுக்கும் தயார் என சொல்லி இருக்கிறோம். ஆனாலும் என்ன பிரச்னை என சொல்லாமல், தொழிலாளர்களை தரம் தாழ்த்தி நடத்துகிறார்கள். இனியும் இதை சகிக்க மாட்டோம். எங்களுடன் பணியாற்ற தயாராக உள்ள தயாரிப்பாளர்களுடன் மட்டுமே நாங்களும் பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Pepsi condemns Producers' Council ,Chennai ,Tamil Film Workers' Federation ,PEPSI ,president ,R.K. Selvamani ,Producers' Council ,Dinakaran ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...