நெல்லை: நெல்லையில் உள்ள பேரூராட்சிகளில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தால் ரூ.100, மலம் கழித்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் உள்ள நிலையில் வடக்கு வள்ளியூர் மற்றும் திசையன் விளை பேரூராட்சிகளில் முதல்கட்டமாக அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் சிறப்புநிலைப் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்கள் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பால வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் பொது கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்தவேண்டும்.
இதனை பயன்படுத்தாமல் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சிறுநீர் கழித்தால் ரூ.100ம், மலம் கழித்தால் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தற்போது ஒவ்வொரு வார்டும் கண்காணிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இதன் மூலம் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.
The post நெல்லையில் உள்ள பேரூராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தால் 500 ரூபாய் அபராதம்: பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.