×

திருப்பரங்குன்றத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருப்பரங்குன்றம், அக். 26: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் மக்கள் நலப்பணிகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பரங்குன்றம் யூனியனில் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளை இணைத்து மொத்தம் 22 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. இந்த வார்டு கவுன்சிலர்கள் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் வேட்டையன் தலைமை வகித்தார். துணை சேர்மன் இந்திரா ஜெயக்குமார், பிடிஓக்கள் செந்தில்மணி, பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் தென்பழஞ்சி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்கள் நல திட்டப்பணிகள் குறித்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பரங்குன்றத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,union councilors ,Tiruparangundram ,Thiruparangunram ,Tiruparangunram ,panchayat union ,Tiruparangunram Union ,Panchayat union councilors ,
× RELATED பெரியபாளையம் அருகே ஊராட்சியை...