திருத்தணி: திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றி அடர்த்தியாக செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொட்டியை சுற்றியும் செடி கொடிகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இக்கட்டிடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் கட்டிடத்தின் சுவர்கள் விரிசல் விட்டும், மேல் தளம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து பலவீனமாக காட்சி அளிக்கிறது. தற்போது, மழை காலம் என்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழும் என்பதால் பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சமடைகின்றனர். எனவே, அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு தற்காலிக இடம் மாற்றி, புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாப்பிரெட்டிப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் appeared first on Dinakaran.