சென்னை: ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து வரப்பட்ட இளம் அழகி, 34 கிராம் தங்க காசுகளை திருடி சென்றதாக ஐ.டி ஊழியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராம் (30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொறியாளரான இவர், பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகாத ராம், ‘லோகேன்ேடா’ என்ற டேட்டிங் செயலி மூலம் இளம்பெண்களை, வீட்டில் யாரும் இல்லாத போது அழைத்து வந்து உல்லாசமாக இருப்பது வழக்கம்.
இந்த செயலி மூலம் 25 வயது இளம்பெண் ஒருவர் ராமுக்கு அறிமுகமானார். பிறகு ஒரு வழியாக அந்த இளம்பெண்ணை 3 மணி நேரத்திற்கு ரூ.6 ஆயிரம் என பேரம் பேசியுள்ளார். அதற்கு இளம்பெண் சம்மதம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் ராம், அந்த இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு ராம் குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு, முன்பே பேசியபடி இளம்பெண்ணுக்கு ரூ.6 ஆயிரம் ரொக்கம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
பின்னர் படுக்கை அறையில் உள்ள பீரோ சரியாக மூடாமல் இருப்பதை கண்டு, பீரோவை திறந்து பார்த்த போது, துணிகள் கலைந்து இருந்தது. அதில் வைத்திருந்த 34 கிராம் மதிப்புள்ள தங்க காசுகள் மாயமாகி இருந்தது. உடனே ராம், உல்லாசத்திற்கு அழைத்து வந்த இளம்பெண்ணை லோகேன்டோ ஆப் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த இளம்பெண், அந்த செயலியில் உள்ள தனது கணக்கை அழித்துவிட்டு வெளியேறிவிட்டார். இதனால் ராமுவால் இளம்பெண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை. இதை சற்றும் எதிர்பார்க்காத ராம் அதிர்ச்சியில் உறைந்தார்.
மேலும் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இருந்தாலும் 34 கிராம் என்பதால் வெளியே சென்ற பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாது என்பதால், வேறு வழியின்றி ராம் நடந்த சம்பவத்தை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகாராக அளித்தார். புகாரின்படி போலீசார், ராமை ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் தொடர்புகொண்ட இளம்பெண்ணை வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு இளம் அழகியிடம் ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் 34 கிராம் தங்க காசுகளை இழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து வந்த அழகி 34 கிராம் தங்க காசுகளுடன் ஓட்டம்: ஐ.டி. ஊழியர் போலீசில் புகார் appeared first on Dinakaran.