×
Saravana Stores

ஆதார் அட்டை மூலம் வயது நிர்ணயம் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஆதார் அட்டை மூலம் வயது நிர்ணயம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 2015ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இறந்தவரின் இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்கும் போது மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் ஆதார் அடிப்படையில் வயதை 45ல் இருந்து 47ஆக தவறாக கணக்கிட்டது. இதனால் பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் இறந்தவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை ரூ.19.35 லட்சத்தில் இருந்து ரூ.9.22 லட்சமாக குறைந்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, வயதை கணக்கிட சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 பிரிவு 94ன் கீழ் பள்ளி விடுப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியிலிருந்து இறந்தவரின் வயதை தீர்மானிக்க வேண்டும். ஆதார் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் ஒன்று. பிறந்த தேதியை, வயதை கண்டுபிடிக்க ஆதாரை பயன்படுத்த வேண்டியது இல்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post ஆதார் அட்டை மூலம் வயது நிர்ணயம் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Motor Accident Claims Tribunal ,Punjab ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி...