×

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடக்கிறது. இந்நிலையில் காக்சிங் மற்றும் தவ்பால் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காக்சிங் பகுதியில் பிஸ்டல்கள், ரைபில்கள், கையெறி குண்டுகள், கார்பைன் குண்டுகள், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வீரர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் தவுபாலில் குவாரோக் மாரிங் நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Manipur Imphal ,Manipur ,Khaksing ,Thawpal ,Coxing ,Dinakaran ,
× RELATED உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை...