×

சி.விஜயபாஸ்கர் சொத்து வழக்கு வேறு கோர்ட்டுக்கு திடீர் மாற்றம்

புதுக்கோட்டை: அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ, அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து நவ.22க்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, நிர்வாக காரணங்களுக்காக இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளார்.

The post சி.விஜயபாஸ்கர் சொத்து வழக்கு வேறு கோர்ட்டுக்கு திடீர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : C. Vijayabaskar ,Pudukottai ,AIADMK ,minister ,Ramya ,Pudukottai District Principal Sessions Court ,C.Vijayabaskar ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக...