×
Saravana Stores

சூனாம்பேடு ஊராட்சியில் பழுதடைந்த அங்கன்வாடி மையம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

செய்யூர்: சூனாம்பேடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்துள்ளதால் குழந்தைகள் தனியார் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு கல்வி கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சி உள்ள பேருந்து நிலையம் அருகே அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இந்த அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் கட்டிடம் சுமார் 15 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. அதன்பின் முறையான பராமரிப்பும் மறுப்புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாததால் கட்டிடம் நாளுக்கு நாள் விரிசல் ஏற்பட்டு பாழடைந்த கட்டிடமாக மாறியது.

கட்டிடம் எப்போது சரிந்து விழும் என்ற அச்சத்தில் இங்கு பயிலும் குழந்தைகளை அங்குள்ள பெருமாள் கோயில் தெருவில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு மாதம்தோறும் வாடகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பழுதான கட்டிடத்தை இடித்து விட்டு அதே பகுதியில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சூனாம்பேடு ஊராட்சியில் பழுதடைந்த அங்கன்வாடி மையம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi Center ,Soonambedu ,Seyyur ,Soonampedu ,Soonampedu panchayat ,Seyyur district, ,Chengalpattu district.… ,Dinakaran ,
× RELATED பாப்பிரெட்டிப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்