- தேவரியம்பாக்கம்
- Walajabad
- காஞ்சிபுரம் மாவட்டம்
- வாலாஜாபாத் ஒன்றியம்
- தேவரியம்பாக்கம் ஊராட்சி
- மகளிர் கவுன்சில்
- பஞ்சாயத்து
- தேவராயம்பாக்கம்
- பெண்கள்
- சுயவேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
- தின மலர்
வாலாஜாபாத்: தேவரியம்பாக்கத்தில் மகளிருக்கான சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் சபை தொடங்கப்பட்டு அதன் மூலம் ஊராட்சியில் உள்ள பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்களான வீட்டுத்தோட்டம் அமைத்தல், சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் என தனித் தன்மையுடன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேவரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தில் 30க்கும் மேற்பட்ட மகளிருக்கு ஆரி ஓர்க் எனப்படும் ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான 30 நாள் பயிற்சி, இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி முகாமை தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கி வாலாஜாபாத் கிளை மேலாளர் ஜெயந்தி, நிறுவன மாவட்ட மேலாளர் உமாபதி, உதவி மேலாளர் கார்த்திகேயன், பயிற்சியாளர் ஆறுமுகம், வட்ட ஒருங்கிணைப்பாளர் ரேணுகா மற்றும் ஊராட்சி செயலாளர் சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
The post தேவரியம்பாக்கத்தில் மகளிர் சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.