உத்திரமேரூர்: உத்திரமேரூரில் வனத்துறை சார்பில், வருவாய் ஈட்டும் வகையில் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூரில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின்கீழ் விவசாயிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பகுதிகளில் பசுமை புரட்சி ஏற்படுத்தும் வகையில் அதிக வருவாய் தரக்கூடிய மரக்கன்றுகளை இலவசமாக விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தேக்கு, வேங்கை, செம்மரம், மகாகனி போன்ற 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்க தயார்நிலையில் உள்ளது. மரக்கன்றுகள் பெற விரும்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பட்டா நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் போன்ற ஆவணங்களை உத்திரமேரூர் அரசு பேருந்து பணிமனை எதிரே அமைந்துள்ள வனத்துறை அலுவலகத்தில் கொடுத்து மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இது குறித்த சந்தேகங்களுக்கு 95516 92727 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.
The post மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.