- விழிப்புணர்வு
- ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி
- மதுராந்தகம்
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி
- ஆதிபராசக்தி குழு
- ஸ்ரீதேவி
- பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி
- தின மலர்
மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில், இயற்கை வளங்களை பாதுகாத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தல், எரிபொருள் சிக்கனம், உடல் ஆரோக்கியம் காத்தல் ஆகியவை குறித்த மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஆதிபராசக்தி குழும பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி தலைமையில் நேற்று நடந்தது.சிறப்பு அழைப்பாளராக மேல்மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு கொடியசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சைக்கிள்களில் இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவோம், உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு ஆகியவற்றுடன் ஆரோக்கியத்தை காப்போம் உள்ளிட்ட பதாகைகளை சைக்கிளில் பொருத்தி சோத்துப்பாக்கம் பஜார் வீதி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சித்தர் பீடம் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சைக்கிளில் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் அன்பு ராஜா, துணை முதல்வர்கள் கார்த்தி, அமுதா, உடற்கல்வி ஆசிரியர்கள் அஸ்வின், குணசேகர் உள்ளிட்ட என்சிசி, என்எஸ்எஸ், சாரண – சாரணியர், சாலை பாதுகாப்பு குழுவினர், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.