×

திருவெறும்பூரில் ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

திருவெறும்பூர், அக்.24: திருவெறும்பூர் பகுதியில் நியாய விலை கடை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு காலக்கட்டங்களில் தெரிவித்தும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் பணியாளர்கள் பெரும் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

பணியாளர்கள் நலன் கருதி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட 9 சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் 21 தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் நியாய விலைகடைப் பணியாளர்கள் அனைவரும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று மலைக்கோயில் பகுதியில் கோரிக்கை மனு ஏந்தி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவெறும்பூரில் ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thiruverumpur ,Tiruverumpur ,
× RELATED திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி...