×

நாகர்கோவில் அருகே ரயில் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவில், அக்.24: இரணியல் – நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் இடையே பூலாங்கோடு பகுதியில் நேற்று காலை சுமார் 75 வயது மதிக்கதக்க மூதாட்டி தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலமாக கிடந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. தண்டவாளத்தை கடக்க முயலும் போது அந்த வழியாகச் சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மோதியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post நாகர்கோவில் அருகே ரயில் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Bhulongode ,Iranial - Nagercoil Town railway station ,Nagercoil Railway Police ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய...