×

ஓய்வு அலுவலர் சங்க தேர்தல்

ஊத்தங்கரை, அக். 24: ஊத்தங்கரையில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிவலிங்கம் 202 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளராக வெங்கடாசலம் 202 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைவராக சிவலிங்கம், செயலாளராக வெங்கடாசலம் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின்றி பொருளாளராக கரண்சந்த் மோகன் சிங், துணைத் தலைவர் ராமசாமி, இணை செயலாளர் கோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஓய்வு அலுவலர் சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Retired Officers Association ,Uthangarai ,Retired ,Association ,Sivalingam ,Venkatachalam ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர்களுக்கான குடும்ப நிதி ₹2 லட்சமாக உயர்த்த கோரிக்கை