- போச்சம்பள்ளி
- மாத்தூர் போலீஸ்
- இன்ஸ்பெக்டர்
- பாலமுருகன்
- எஸ்ஐ அன்பழகன்
- கண்ணந்தள்ளி கூட்ரோடு
- மாத்தூர்
- கிருஷ்ணகிரி
- பெங்களூரு…
- தின மலர்
போச்சம்பள்ளி, டிச.21: மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. அன்பழகன் மற்றும் போலீசார், மத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணன்டஅள்ளி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த காரை போலீசார் நிறுத்தினர். ஆனால், கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து, போலீசார் காரை துரத்தி சென்று, மத்தூர் டோல்கேட்டில் நின்ற காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, டிரைவர் தப்பியோடி விட்டார். அதில் தடை செய்யப்பட்ட 403 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குட்காவுடன் காரை பறிமுதல் செய்து, தப்பி சென்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post 400 கிலோ குட்கா காருடன் பறிமுதல் appeared first on Dinakaran.