- தஞ்சாவூர்
- ஓய்வுபெற்ற காவலர்கள் நலச் சங்கம்
- தஞ்சாவூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கம்
- தின மலர்
தஞ்சாவூர் டிச.16: ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்க 16ம் ஆண்டு தொடக்க விழாவில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 16ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகேசன், மாநில மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் தேவதாஸ், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கூட்டமைப்பு தலைவர் வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கான குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதிர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல் மருத்துவப்படியை ரூ.1,000மாக உயர்த்தி வழங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பண்டிகை கால முன் பணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க உதவித் தலைவர் ராஜகுரு, நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஓய்வூதியர்களுக்கான குடும்ப நிதி ₹2 லட்சமாக உயர்த்த கோரிக்கை appeared first on Dinakaran.