×

தமிழ்நாடு ஐஎன்டியூசியில் ரூ.26 லட்சம் பணம் கையாடல்: பொதுச்செயலாளர் எம்.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை: இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியூசி) தமிழ்நாடு கிளையின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில், அமைப்பின் பொது செயலாளர் எம். பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ரகுநாதன், வாழப்பாடி ராமசுகந்தன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுச் செயலாளர் எம்.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: சங்கத்திற்கு 150 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் தமிழகம் முழுவதும் உள்ளது. இதில் 26 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இதற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு ஐஎன்டியூசியில் ரூ.26 லட்சம் பணம் கையாடல்: பொதுச்செயலாளர் எம்.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,INDUC ,General Secretary ,M. Panneerselvam ,Chennai ,Indian National Trade Union Congress ,Rayapetta, Chennai ,Tamil Nadu Congress Committee ,State Secretary ,M Panneerselvam ,Dinakaran ,
× RELATED ஆங்கிலப் புத்தாண்டு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து