×

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் மரபுகளை ஏற்று நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேடும் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதியை சேர்ப்பது தொடர்பான விஷயத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதன் விளைவாக பல பல்கலைக்கழகங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர்களே இல்லை. இது கவலை தரக்கூடியதாகும்.

தற்போதுள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் யுஜிசி பிரதிநிதியை தேடல் குழுக்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்கு இடமில்லை. கல்வி தொடர்பானவை நீங்கலாக யுஜிசி விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டியவை அல்ல. துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்ப்பதற்கான பிரிவை பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் இடம்பெறச் செய்வதே இதற்கு தீர்வு. அதுவரை, ஆளுநர் தற்போதைய நடைமுறைகள், மரபுகளை ஏற்பதற்கு இசையவேண்டும். இவ்வாறு பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

The post துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் மரபுகளை ஏற்று நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து appeared first on Dinakaran.

Tags : Governor ,Former ,Balagurusamy ,Chennai ,-Chancellor ,Anna University ,University Grants Commission ,UGC ,Tamil Nadu.… ,Vice-Chancellor ,
× RELATED மிசோரம் ஆளுநர் வி.கே.சிங் வரும் 9ம் தேதி பதவியேற்பு