×

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக சார்பில் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளிட்ட அறிக்கை:
தேமுதிக சார்பில் வரும் வருகிற 6ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக சார்பில் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 6th Protest ,Temuthika ,Premalatha ,Chennai ,Demutika ,Secretary General ,Kandana ,Protest ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவுதினம்; தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுப்பு!