×

ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத உற்சவங்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு உற்சவங்கள் நடக்கும். அதன்படி, வருகிற ஜனவரியில் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது. இதில், 2-ம் தேதி விசேஷ உற்சவம்,  13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி, கோயில் சந்நிதியில் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. 14-ம் தேதி வைகுண்ட துவாதசி, தெப்பகுளத்தில் சக்கரத்தீர்த்த முக்கொட்டி, ஜனவரி 15-ம் தேதி மகர சங்கிராந்தி, 16 அன்று கோதா பரிணயோற்சவம், வாரி பார்வேட்டை உற்சவம்,  17-ம் தேதியன்று ராமகிருஷ்ண தீர்த்த முக்கொட்டி, 18-ம் தேதி பிரணய கலகோற்சவம் நடக்கிறது.இதுதவிர, 22-ம் தேதி பெரிய சாத்துமுறை, வைகுண்டம் வழியாக திருமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படும் சொர்க்கவாசல் தரிசனம்  நிறைவு பெறுகிறது. வாரி கோயிலில் ஜனவரி 26-ம் தேதி அத்ஹாயன உற்சவங்கள் நிறைவு பெறுகிறது. 27 ம் தேதி திருமலை நம்பி சந்நிதிக்கு செல்லும் மலையப்ப சுவாமி உற்சவர் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது….

The post ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத உற்சவங்கள் appeared first on Dinakaran.

Tags : Eummalayan Temple ,Tirumala ,Tirupati Eyumalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...