- ஈரோடு
- அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி
- பெருந்துறை குன்னத்தூர் சாலை, ஈரோடு மாவட்டம்
- பெருந்துறை போலீசார்
- தின மலர்
ஈரோடு, அக். 23: ஈரோடு மாவட்டம் பெருந்துறை குன்னத்தூர் சாலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புற காலியிடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று, அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் பெருந்துறை ஆயிக்கவுண்டன்பாளையம் சவுண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரமேஷ் மகன் நவீன் (23), சீனாபுரம் கோபி சாலையை சேர்ந்த மணிகண்டன் (25) என்பதும், அவர்களை சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்க வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.200 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், சத்தி புதுகுய்யனூர் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்றதாக பண்ணாரியை சேர்ந்த பெருமாள் (41) என்பவரை சத்தி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.