×

கேரளா பஸ் – வாகனம் உரசல் கட்டிட தொழிலாளி படுகாயம்

திங்கள்சந்தை, அக். 23: நாகர்கோவில் ராமன்புதூர் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (69). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று மாலை திருவனந்தபுரம் செல்வதற்காக வடசேரியில் இருந்து கேரளா அரசு பஸ்சில் ஏறினார். பஸ் தோட்டியோடு தாண்டி வில்லுக்குறி பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது 2 வாகனங்களும் உரசி கொண்டதில் முன்னால் சென்ற வாகனத்தில் இருந்த கம்பி, ஜன்னல் ஓரம் இருந்த ஐயப்பனின் இடது முழங்கையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அதே பஸ்ஸில் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு ஐயப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இரணியல் போலீசார் கேரளா அரசு பஸ் டிரைவர் திருவனந்தபுரம் திருவெல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (48) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளா பஸ் – வாகனம் உரசல் கட்டிட தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ayyappan ,Ramanputur Nehrunagar ,Nagercoil ,Kerala government ,Vadassery ,Thiruvananthapuram ,Thothi ,Villukuri ,Kerala ,Dinakaran ,
× RELATED ஐயப்பன் அறிவோம் 36: சுவாமி ஐயப்பன்