- மீஞ்சூர்-தச்சூர் கூட்டு
- பொன்னேரி
- மீஞ்சூர்-தச்சூர் கூட்டு சாலை
- Meenjur
- காட்டுப்பள்ளி தச்சூர் கூட்டுச் சாலை
- தின மலர்
பொன்னேரி: விபத்துகளை தடுக்கும் வகையில் மீஞ்சூர்-தச்சூர் கூட்டு சாலை சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மீஞ்சூரில் இருந்து காட்டுப்பள்ளி தச்சூர் கூட்டுசாலை வரை பைக், கார், அரசுப் பேருந்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் மற்றும் வேகத்தடைகள் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இதுசம்பந்தமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலர் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து, பொன்னேரி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமாரின் ஆலோசனையின் பேரில் கோட்ட பொறியாளர் சிற்றரசு, உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர், இளநிலை பொறியாளர் பரந்தாமன், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலம் மீஞ்சூரில் இருந்து காட்டுப்பள்ளி தச்சூர் கூட்டுசாலை வரை சுமார் 12 கிமீ தூரத்துக்கு சீரமைக்கப்பட்டது. அப்போது, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர்கள், வேகத்தடைகளில் கருப்பு, வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டும் பணி தீவிரமாகி நடந்து வருகிறது. மேலும் மீஞ்சூர் முதல் வல்லூர் அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி தச்சூர் கூட்டு சாலை வரை சாலையின் நடுவே பழுதடைந்த பகுதிகளை கண்டெடுத்து தார் சாலை போடும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
The post விபத்துகளை தடுக்கும் வகையில் மீஞ்சூர்-தச்சூர் கூட்டு சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.