கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் மிக கனமழை சுமார் 2 மணி நேரம் விடாமல் பெய்தது. இதனால் பிரஸ் காலனிக்கு அடுத்துள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கின. உடனடியாக 3 பேரும் காரில் இருந்து தப்பினர்.
அவர்கள் இறங்கிய பின் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. இதேபோல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் காவிரி ரயில் நிலையம் அருகேயுள்ள சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் மாணவர்களுடன் தனியார் கல்லூரி பஸ் சிக்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது.
The post கோவையில் கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள் 3 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.