×

பச்சை பசேல் என மாறிய சோலை வனங்கள்

valparai,green fieldsவால்பாறை : வால்பாறை பகுதி கோவை மாவட்டத்தில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வருகின்றனர். இயற்கையின் எழிலை ரசிக்கின்றனர். பச்சை பசேல் என படர்ந்து வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள், சிற்றருவிகள், ஆறுகள், அணைக்கட்டுகள் என சுற்றுலா பயணிகளின் மனத்தை கவர்கின்றன.

மேலும் எளிதில் பார்க்கும்படியாக மேய்ச்சலுக்கு வரும் வரையாடுகள், காட்டெருமைகள், யானைகள், மான்கள் என வால்பாறை பகுதி இயற்கை வன விலங்கு சரணாலயமாக மாறி உள்ளது. தென்மேற்கு பருவமழையால் வால்பாறை சுற்று வட்டார வனப்பகுதிகளில் பசுமை படர்ந்துள்ளது. தேயிலை தோட்டங்களும், புல்வெளிகளும், வனப்பகுதிகளில் நீடிக்கும் பசுமை கண்கொள்ளா காட்சியாக உள்ளது. காடம்பாறை பகுதியில் உள்ள தேக்கு வனப்பகுதி பசுமை படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. அதையடுத்து உள்ள கீழ்பூணாச்சி ஆறு மற்றும் நீர்வீழ்ச்சி மனதை கொள்ளை அடிக்கிறது.

valparai forests turned into green basalts

The post பச்சை பசேல் என மாறிய சோலை வனங்கள் appeared first on Dinakaran.

Tags : Valparai ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED மோதிராபுரம் ரோட்டில் இறைச்சிக்கழிவுகள் கொட்டுவதால் மக்கள் வேதனை