×

மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்: பாலகிருஷ்ணன் பேட்டி

மயிலாடுதுறை: கார்ப்பரேட்களுக்கு, மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

ஒன்றிய அரசு இயற்கை இடர்பாடு பாதிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய நிதியை வழங்காததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க முடியவில்லை. ஒன்றிய அரசு தனது பாரபட்சத்தை கைவிட்டு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.  தமிழ்நாடு மற்றும் எந்த மாநிலத்திற்கும் ஆளுநர் பதவி என்பது தேவையில்லை.

பாஜ அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியை பயன்படுத்தி ஒன்றிய அரசு போட்டி சர்க்கார் நடத்துவது கண்டிக்கத்தக்கது. தமிழ்த்தாய் வாழ்த்தை திருத்தி பாடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. கார்ப்பரேட்களுக்கு, மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்: பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Balakrishnan ,Mayiladuthurai ,Marxist ,Communist ,
× RELATED கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது: பினராயி விஜயன்