திருத்தணி: திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், மலைக்கோயிலில் உள்ள உண்டியல்களில் நகை, பணத்தை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். கோயில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 17 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
மலைக்கோயில் வசந்த மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ரமணி மேற்பார்வையில், கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில், கோயில் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவில், உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ.80 லட்சத்து 7 ஆயிரத்து 917 ரொக்கமும், 234 கிராம் தங்கமும், 3,456 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
The post திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.80 லட்சம் appeared first on Dinakaran.