×

வலங்கைமான் கோதண்ட ராமசாமி கோயிலில் கும்பாபிஷேகம்

வலங்கைமான், அக்.22: வலங்கைமான் கடைவீதி பகுதியில் உள்ள நகர் பகுதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயில் கடந்த சில மாதங்களாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. பின்னர் கும்மாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கால பூஜை துவங்கியது. அதனை அடுத்து ஞாயிறு காலை இரண்டாவது கால பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று காலை நான்காவது கால பூஜை நடைபெற்று கட புறப்பாடு நடைபெற்றது. காலை 9:30 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் ஆய்வாளர் மும்மூர்த்தி, அறங்காவல் குழு தலைவர் சீதாராமன், அறங்காவலர் லட்சுமண சாமி மற்றும் பத்மாசாலியர் சமூகத்தினர் நகரவாசிகள் செய்திருந்தனர்.

The post வலங்கைமான் கோதண்ட ராமசாமி கோயிலில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Godanda Ramasamy Temple ,Godandarama Swami Temple ,Kummaphishek ,
× RELATED வலங்கைமானில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்ற கோரிக்கை