×
Saravana Stores

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடால் நிகழ்ச்சி பொதுமக்களிடம் 210 மனுக்களை அமைச்சர் பெற்றார்

செங்கல்பட்டு: மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் இருந்து 210 கோரிக்கை மனுக்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் 210 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த கூட்டத்தில், கடந்தமுறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மனுக்கள் பெறும் கூட்டத்தில் அளித்த மனுவின் மீது தீர்வு காணப்பட்டு திருக்கழுக்குன்றம் வட்டம், வல்லிபுரத்தை சேர்ந்த காயத்ரி என்ற பயனாளிக்கு வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் முருகமங்கலம் திட்டப்பகுதியில் 46 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகள் ஆகியவற்றை அரசு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப் – கலெக்டர் வெ.நாராயண சர்மா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகீதா பர்வீன், வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், திருக்கழுக்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி, செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகர் மன்றத் தலைவர் ஜெ.சண்முகம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

* மின்னணு குடும்ப அட்டை
குன்றத்தூர்: மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, 800 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். மேலும், 14 மாணவர்களுக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவி வழங்கினார்.

தொடர்ந்து பரணி புத்தூர், கோவூர், கொளப்பாக்கம் உள்ளிட்ட 6 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பில் டிப்பர் லாரிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடால் நிகழ்ச்சி பொதுமக்களிடம் 210 மனுக்களை அமைச்சர் பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Small and Medium Enterprises ,Minister ,Th.Mo.Anparasan ,Collector ,Chengalpattu District Collector ,Dinakaran ,
× RELATED குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்...