×
Saravana Stores

மருத்துவமனை, வழிபாட்டு தலம் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: தீபாவளி பண்டிகையை மாசற்ற, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அனுமதித்துள்ள கால அளவுகளில், காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீபாவளியை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மருத்துவமனை, வழிபாட்டு தலம் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Diwali festival ,
× RELATED மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை...