- பாளையம்
- வைகுண்டா பெருமாள் கோயில்
- காஞ்சிபுரம்
- வைகுண்டவள்ளி சமீதா வைகுந்த பெருமாள் கோயில்
- காஞ்சிபுரம்
- பல்லவ மன்னர்கள்
- Kanchipura
- வைகுந்த பெருமாள் கோயில்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுந்த வள்ளி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம், அரிய வகை மணல், கற்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை கொண்டுள்ள பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும் இக்கோயில் தொல்லியல்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த வகையில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, திருப்பணிகளை துவங்க பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மூலவர் சன்னதியில் நடை சாற்றப்பட்டு, கோயில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க, மேளதாள வாத்தியங்கள் முழங்க, சிறப்பு யாக சாலை பூஜைகள் செய்து பாலாலயம் நடத்தி, உற்சவர் வைகுந்தவல்லி தாயார் மற்றும் ஸ்ரீதேவி – பூதேவியுடனான வைகுண்ட பெருமாள் உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு திருமஞ்சனங்கள் செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் வளாகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் துவங்குவதற்கான புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறையினரிடம் கோயில் வளாகம் ஒப்படைக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post வைகுண்ட பெருமாள் கோயிலில் பாலாலயம் appeared first on Dinakaran.