×

முசிறி சார்பு நீதிமன்றத்தில் கட்டணமில்லா 15100 உதவி எண்

 

முசிறி,அக்.22: முசிறி சார்பு நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைகள் குழுவானது அனைவருக்கும் நீதி பெற சம வாய்ப்பு என்ற நோக்கத்தில் பொதுமக்கள் இலவச சட்ட உதவி பெற அவசர இலவச எண் 15100ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் சார்பு நீதிமன்ற வளாகத்தில் அறிமுகப்படுத்தினர்.

பொதுமக்கள் தங்களது அவசர சட்டப் பணிகளுக்கு இந்த அலைபேசி எண்ணுக்கு இலவசமாக தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருதையா, செயலாளர் தமிழ்ச்செல்வன், அரசு வழக்கறிஞர் சப்தரிஷி வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார், ராஜசேகர், பத்மராஜ் மற்றும் பொதுமக்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post முசிறி சார்பு நீதிமன்றத்தில் கட்டணமில்லா 15100 உதவி எண் appeared first on Dinakaran.

Tags : Musiri Probate Court ,Musiri ,National Legal Services Commission ,Dinakaran ,
× RELATED துறையூர்- முசிறி செல்லும் தார்சாலையை சீரமைக்க கோரிக்கை