×
Saravana Stores

இறால் மீன் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைப்பதற்கு மானியம்

நாகப்பட்டினம்.அக்.21; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைப்பதற்கு மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உவர்நீர் இறால் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பெருக்கிடவும், இறால் உற்பத்தியினை அதிகரித்திடவும் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி பிரதம மந்திரி மீன்வள மேபாட்டு திட்டம் 2024 -25-ன் கீழ் உயிர் கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்களில் உவர்நீர் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் 1 அலகு அமைப்பதற்கான மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.7.20 லட்சம் வரை வழங்க நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பொது பிரிவில் 2 எண்ணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் நாகப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post இறால் மீன் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைப்பதற்கு மானியம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam.Oct ,Collector ,Akash ,Nagapattinam ,Fisheries and Fishermen Welfare Department.… ,Dinakaran ,
× RELATED மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...