- திருத்தணி கிழக்கு ஒன்றிய தி.மு.க
- திமுக
- பொதுச்செயலர்
- Duraimurugan
- திருவள்ளூர்
- மேற்கு மாவட்டம்
- திருத்தணி கிழக்கு ஒன்றியம்
- ஆர்த்தி ரவி சரிவரா
திருத்தணி அக். 21: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்த்தி ரவி சரிவர கட்சி பணியாற்றாத காரணத்தால், அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, கட்சி பணிகள் செவ்வனே நடைபெற அவருக்குப் பதிலாக, வி.கே.ஆர்.புரம், பொந்தால கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கே.ராஜேந்திரன் திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய திமுக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பொறுப்பாளர் கே.ராஜேந்திரன் திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளுடன் திருத்தணியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கட்சி பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று அறிவுறை கூறினார். சந்திப்பின் போது வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கிஷோர், ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நியமனம்: தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.