×

கைதிக்கு செல்போன் கொடுத்த பெண் வழக்கறிஞர் கைது

புழல்: புழல் விசாரணை சிறையில் அடிதடி வழக்கில் உள்ள கைதி ஆனந்தன் என்கிற கல்லறை ஜான் என்பவரை பார்க்க சென்னை கேகே நகர் கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி(26) சிறைக்கு வந்துள்ளார். கைதி கல்லறை ஜானை பார்த்தவுடன் பிரியதர்ஷினி மறைத்து வைத்திருந்த செல்போனை கைதியிடம் கொடுத்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேச வைத்தார்.

இதை சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த சிறை துறையினர், பிரியதர்ஷினி வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இவர் இதற்கு முன்பு இவரது வாகனத்தை நிறுத்துவது சம்பந்தமாக சிறைக்குள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post கைதிக்கு செல்போன் கொடுத்த பெண் வழக்கறிஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Priyadarshini ,KK Nagar East Vanniyar Street, Chennai ,Anandan ,Grave John ,Puzhal Trial Jail ,
× RELATED ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்