புழல்: புழல் அம்பேத்கர் சிலை அருகில், அம்பேத்கரை அவமதித்து பேசிய அமித் ஷாவை கண்டித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, புழல் அண்ணல் அம்பேத்கர் மேஜிக் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், புழல் அம்பேத்கர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதில், அம்பேத்கரின் திருவுருவப்படத்தினை கைகளில் ஏந்தியபடி, அம்பேத்கரை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், உடனடியாக அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, ஆட்டோ மற்றும் மேஜிக் ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த, ஆர்ப்பாட்டத்தில் புழல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆட்டோ, மேஜிக் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.