×

மைசூரு மூடா அலுவலகத்தில் 2வது நாளாக ஈடி சோதனை

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக மூடா முறைகேடு எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆளுநர் தாவர் சந்த், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 1 மணி அளவில் ஒன்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள், மைசூருவில் உள்ள மூடா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். நேற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். காலை 10 மணி அளவில் மூடா அலுவலகம் வந்த அதிகாரிகள் இரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். மூடா கமிஷனர் ரகுநந்தனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

The post மைசூரு மூடா அலுவலகத்தில் 2வது நாளாக ஈடி சோதனை appeared first on Dinakaran.

Tags : ED ,Mysore Muda ,BENGALURU ,Karnataka ,Chief Minister Siddaramaiah ,Governor ,Davar Chand ,Chief Minister ,Siddaramaiah ,Union Enforcement Department ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர்...