- குஷ்பு
- பிரியங்கா காந்தி
- வயநாடு
- மக்களவை
- சென்னை
- குஷ்பு
- பாஜக
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ராகுல் காந்தி
- 2024 லோக்சபா
- ராய் பரேலி
- வயனட் மக்களவை
சென்னை: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜ சார்பில் நடிகை குஷ்பு களமிறக்கப்படுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 மக்களவைத்தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அவர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதன்பின் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. காலியாக உள்ள வயநாடு ெதாகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இத் தொகுதியில் பாஜ சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என பாஜ மேலிடம் ஆலோசித்து வருகிறது. பிரியங்காவுக்கு எதிராக நடிகை குஷ்புவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்பு பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், ‘‘தேர்தல் வந்தாலே வதந்தி பரவுவது வாடிக்கை தான். வயநாட்டில் நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சி மேலிடம் என்னிடம் இதுவரை பேசவில்லை. அதேநேரம், கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதற்கு 100 சதவீதம் சிறப்பாக நடந்து கொள்வேன்’’ என்றார்.
The post வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்பு போட்டியா? appeared first on Dinakaran.