×

வண்டுவாஞ்சேரி அரசு தொடக்க பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டும் பணி

 

வேதாரண்யம், அக்.17: வண்டுவாஞ்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் -வேதாரண்யம் தாலுக்கா வண்டுவாஞ்சேரி ஊராட்சி சரபோஜிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் – 2024-25ன்கீழ் 34.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனருமான உதயம் முருகையன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட திமுக துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், வண்டுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி தனபாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தியாகராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post வண்டுவாஞ்சேரி அரசு தொடக்க பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Vanduvancheri Government Primary School ,Vedaranyam ,Vanduvanchery Government Primary School ,Nagapattinam District ,Taluk ,Vanduvancheri Panchayat Sarapojirajapuram Panchayat Union Primary School Infrastructure Project ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர் ரெட்லி ஆமைகள்