×

மழையிலிருந்து பாதுகாக்க கலெக்டர் அலுவலகத்தில் புதிய நிழற்குடை

 

கரூர், அக். 17: கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நேரடியாக கலெக்டர் அலுவலகத்தில் வந்து கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கி வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நீண்ட நாட்களாகாக போதிய நிழலில் அமர்வதற்கு இட வசதி இல்லாமல் மரத்தடியில் இருந்து தங்கள் மணுக்களை எழுதிக் கொடுத்து வந்தனர். இந்நிலையில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் பயன்படுத்துவதற்காக பல லட்ச ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

The post மழையிலிருந்து பாதுகாக்க கலெக்டர் அலுவலகத்தில் புதிய நிழற்குடை appeared first on Dinakaran.

Tags : Karur ,4 Assembly Constituencies ,District ,People's Grievance Redressal Camp ,Collector ,Dinakaran ,
× RELATED எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்