×

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெ க்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும், குறைகள் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளைகள் விநியோகத்தை சீர்படுத்த வசதியாக கருர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டிசம்பர் 30ம் தேதி மாலை 4 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே எரிவாயு நுக ர்வோர்கள் இந்த நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொ ண்டு எரிவாயு விநியோக த்தில் ஏற்படும் குறைகள் தொ டர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

The post எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur District ,Collector ,Tangavel ,Dinakaran ,
× RELATED வெள்ளியணை அருகே கஞ்சா விற்க முயன்றவர் மீது வழக்கு பதிவு